பலத்த பாதுகாப்புடன் பிரதமர் மஹிந்த காசியில் வழிபாடு

Report Print Dias Dias in இலங்கை

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, காசி விசுவநாதர் ஆலயத்தில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

காசி விசுவநாதர் கோயில் என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும்.

இக்கோயில் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

வாரணாசி என்று தற்போது அழைக்கப்பெற்றாலும் பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விசுவநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது.

இப்பகுதி வழமையை விட பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.