சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்! ஜெனீவாவில் இருந்து இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ள அலுவலர்

Report Print Ajith Ajith in இலங்கை

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைக்காக வெளிநாட்டு சேவையில் ஈடுபட்டுள்ள அலுவலர் ஜெனீவாவில் இருந்து இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியன் பென்னிஸ்டார் கடந்த வருட இறுதியில் கடத்தப்பட்டு விசாரணை செய்யயப்பட்டதாக முறையிடப்பட்டது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது அந்த பெண்ணுடன் நட்பை கொண்டிருந்த சண்டே ஒப்சேவர் செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் தாரிஷா பெஸ்டியன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன் தொடராக சண்டே ஒப்சேவரின் செய்தியாளர் அனுனங்கி சிங்கும் அண்மையில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த நிலையில் சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியரின் கணவரானன கிஹான் இந்திரகுப்த ஜெனீவாவில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கையின் சார்பில் ஜெனீவாவில் சேவையாற்றி வருகிறார். இவரை விசாரணைக்காக உடனடியாக நாடு திரும்புமாறு வெளியுறவு அமைச்சு அழைத்துள்ளது.