ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்..

Report Print Dias Dias in இலங்கை

ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உத்தரவாதம் மீண்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் விமான சேவை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கும் இந்த கடன் உத்தரவாத கடிதங்களை மீண்டும் விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடன் பாதுகாப்பிற்காக இவ்வாறு 8 கடன் உத்தரவாத ஆவணங்களும் 2 திறைசேரி உத்தரவாதமும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஸ்ரீலங்கன் விமான சேவை பெற்றுக்கொண்டுள்ள கடன் வசதிகளின் பெறுமதி 205.38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.