எதிர்வரும் மே மாதத்தில் ஜப்பான் செல்லவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

Report Print Ajith Ajith in இலங்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் மே மாதத்தில் ஜப்பான் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசியாவின் எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் ஜப்பானுக்கு செல்லவுள்ளார்.

இது தொடர்பில் ஜப்பானிய தூதுவர் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து மாநாட்டுக்கான அவரின் பிரசன்னத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.

இந்த மாநாடு ஜப்பான் - டோக்கியோவில் மே மாதம் 28 - 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள், வர்த்தக முன்னணியாளர்கள் உட்பட்ட பலர் பங்கு கொள்ளவுள்ளனர்.

இந்த பயணத்தின் போது கோட்டாபய ராஜபக்ச ஜப்பானிய தலைவர்களையும், ஊடகவியலாளர்களையும் சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலக செய்திகள் தெரிவிக்கின்றன.