இலங்கையில் நீண்ட நாட்களாக அடைத்து வைக்கப்பட்ட ஜேர்மன் பெண் மீட்பு

Report Print Dias Dias in இலங்கை

களுத்துறை, வாதுவை பகுதியில் ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை நீண்டகாலமாக வீட்டில் அடைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் வாதுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா விடுதியில் தங்குவதற்கு வருகை தந்த பெண்ணை வியாபாரம் செய்யலாம் என ஏமாற்றி குறித்த சுற்றுலா விடுதி உரிமையாளர் அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக ஜேர்மனிய பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜேர்மன் பெண் பாதுகாப்பாக உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.