சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குமாறு கோரிக்கை

Report Print Ajith Ajith in இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகி கொண்டமையை அடுத்து இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் அதற்கு சர்வதேச பொறிமுறையே பொருத்தமானது என சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை விலகியமையை அடுத்து மனித உரிமைகள் பேரவையிடம் இருந்து வலுவான பதில் தேவைப்படுகிறது.

அது சர்வதேச பொறிமுறை ஒன்றுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்தும் பொறிமுறையாகவே இருக்கும் என சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய நிலை ஆய்வாளார் தியாகி ருவன் பத்திரனகே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்ளக விசாரணைகளை நடத்தப் போவதாக கூறுகிறது.

எனினும் வரலாற்றை பார்க்கும்போது உள்ளக விசாரணைகளில் தோல்விகளே ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியைக் கோரி காத்திருக்கின்றனர்.

எனவே சர்வதேச பொறிமுறையே சாத்தியமானது என்று பத்திரனகே குறிப்பிட்டுள்ளார்.