சுவிஸ் போதகருடன் அரை மணி நேரம் பேசியவரிற்கு யாழில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது

Report Print Dias Dias in இலங்கை

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நோயாளர்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரை IDH தொற்று நோயியல் மருத்துவ மனைக்கு அனுப்பத் தீா்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளா் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிக்கப்படும் என பணிப்பாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த தொற்றுக்குள்ளானவர், சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகருடன் அரை மணி நேரம் பேசியதாகத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காய்ச்சல் மற்றும் சுவாசப்பை அழற்சி ஆகியவற்றினால் குறித்த நபர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

Latest Offers

loading...