இராணுவ கேர்ணல் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Report Print Steephen Steephen in இலங்கை

கொத்தலாவல பாதுகாப்பு பயிற்சி பீடத்திற்கு சொந்தமான வெஹேர பிரதேசத்தில் அமைந்துள்ள மருத்துவமனையின் மனிதவள முகாமையாளராக பணியாற்றிய இராணுவத்தின் கமாண்டோ படைப் பிரிவின் கேர்ணல், அவரது மகன் மற்றும் தாயார் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேர்ணல் நேற்று முன்தினம் இரவு அங்கொடையில் அமைந்துள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகன் மற்றும் தாய் ஆகியோர் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேர்ணலின் தாய் கடும் சுகவீனம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் மூலம் கேர்ணலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.