வங்கிச் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்த ஜனாதிபதி

Report Print Dias Dias in இலங்கை
1934Shares

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலை கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கிச் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அவசியமான இடங்களில் ஊரடங்கு வேளையிலும் வங்கி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தல் அனைத்து வணிக வங்கிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள வசதியாக சுழற்சி முறையில் 60-72 மணித்தியால இடைவெளியில் 8 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.