கொழும்பில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவும் ராம் நற்பணி மன்றம்

Report Print Dias Dias in இலங்கை

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ளது.

இதனால் தமது வருமானம் இழந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு மற்றும் அவசிய தேவைகளை வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், ராம் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவு விநியோகம் செய்யப்பட்டது.

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், ராம் நற்பணி மன்றத்தின் தலைவருமான சீ.வை.பி.ராம் அவர்களின் ஏற்பாட்டில் இவ்வாறு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

நீண்ட காலமாக கொழும்பு வாழ் மக்களிற்கு ஏற்படும் இன்னல்களின் போது எல்லாம் கைகொடுக்கும் சீ.வை.பி.ராம் அவர்களின் இவ்உதவி இன்றைய சூழலில் அப்பகுதி மக்களிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.