இலங்கைக்கு அவசர நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும்! ஐக்கிய நாடுகள் சபை

Report Print Ajith Ajith in இலங்கை

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்களில் ஈடுபட்டு வரும் இலங்கைக்கு அவசர நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்த முடியும் என்பதுடன் பரிசோதனை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த முடியும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளரின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு உதவி செயலாளர் ஆர்மிடா சல்சியா அலிஸ் ஜாஹ்பானா தெரிவித்துள்ளார்.

எனவே சர்வதேச சமூகம் இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு நிதியுதவிகளை வழங்குவதன் மூலம் கடன் சுமைகளை குறைக்க முடியும் என்றும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு திட்டங்களுக்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என்றும் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு உதவி செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.