பிரதமர் மஹிந்த தலைமையில் சர்வகட்சித் தலைவர்கள் கூட்டம்

Report Print Dias Dias in இலங்கை

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமைகளை கையாளும் செயற்பாடுகளை மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கும் விதத்தில் பிரதமர் தலைமையில் வாராந்த சர்வகட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை அலரிமாளிகையில் சர்வ கட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் மக்கள் பிரச்சினைகள் குறித்த இணையதள கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

மந்திரி.எல்கே (manthiri.lk) எனும் இணையதளம் மூலமாக இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நாளை பிற்பகல் ஆறு மணிக்கு பிரதமர் தலைமையில் ஆளும்கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போதுள்ள நிலைமையில் அரசாங்கம் அடுத்த கட்டமாக எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது, மக்களுக்கான நிவாரண உதவிகளை எவ்வாறு கையாள்வது, சுகாதார வேலைத்திட்டங்களை பலப்படுத்த அதற்கான நிதி ஒதுக்கீடுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற அரசாங்கதின் வேலைத்திட்டங்களை தெளிவுபடுத்தும் விதமாக இந்த சந்திப்பு அமையவுள்ளது.