சாவகச்சேரியில் வீடு புகுந்து காெள்ளை! தம்பதியினர் படுகாயம்

Report Print Dias Dias in இலங்கை

நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் மண்டுவில் பிரதேசத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன், மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16000 ரூபா பணம் ஆகியவற்றைக் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த தம்பதியினர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.