க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் விரைவில்

Report Print Dias Dias in இலங்கை

2019 கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை முடிவுகளை கணினி மயப்படுத்தும் வேலைகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாக பரீட்சைகள் ஆணையர் மேலும் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் முழுமைப்பெற்ற பின் பெறுபேறுகள் வெளியிடப்படவிருப்பதாக ஆணையர் குறிப்பிட்டார்.

இதே வேளை, ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.