இலங்கையின் கொரோனா நிலை - நோயாளர்களின் எண்ணிக்கை 718ஆக அதிகரிப்பு

Report Print Sujitha Sri in இலங்கை
565Shares

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது.

இந்த விடயத்தை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று இரவு 11:15 க்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பிலான நிலைமை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இன்று மாலை 8.30 மணி வரையான இலங்கையின் நிலைமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை - 708

தேறியோர் மற்றும் குணமடைந்து வெளியேறியோர் - 184 என தெரிவிக்கப்பட்டுள்ளது.