2018இல் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள்! மன்னிப்பு கோரியுள்ள பேஸ்புக் நிறுவனம்

Report Print Ajith Ajith in இலங்கை

2018ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமாக அமைந்திருந்த குற்றச்சாட்டுக்காக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

தமது தளத்தின் குறைப்பாடு காரணமாக ஏற்பட்ட உண்மையான மனித உரிமை தாக்கங்களை ஏற்று அதற்காக மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இந்த சம்வங்களை அடுத்து, உள்ளூர் மொழித் திறன்களைக் கொண்ட உள்ளடக்க மதிப்பீட்டாளர்களை பணியமர்த்தல், வெறுக்கத்தக்க பேச்சின் அறிகுறிகளை தானாகவே கண்டறிந்து, தவறான உள்ளடக்கத்தை பரப்புவதைத் தடுக்கும் தொழிநுட்பத்தை செயல்படுத்துதல் மற்றும் உள்ளூர் சிவில் சமூக குழுக்களுடனான உறவை சீரமைப்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் குழுக்கள் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது பற்றிய கிட்டத்தட்ட ஒரு தசாப்த எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கத் தவறியதையும் பேஸ்புக் ஏற்றுக்கொண்டுள்ளது.

சிங்கள பௌத்தர்களின் உணவில் 'கருத்தடை மாத்திரைகள்' கலப்பதை ஒப்புக் கொண்ட ஒரு முஸ்லிம் உணவகம் தொடர்பில் வெளியான பொய்யான தகவல் 2018ஆம் ஆண்டின் அமைதியின்மை மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.