கொரோனாவின் பெயரில் திரைமறைவில் நடப்பது என்ன? ஊடகவியலாளர் நிலாந்தன் கேள்வி

Report Print Banu in இலங்கை

இலங்கையில் கொரோனா அனர்த்த பணிகள் என்ற பெயரில் படையினரின் செயற்பாட்டை அதிகரித்திருப்பதால் பின்னணி என்னவென ஊடகவியலாளர் நிலாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இன்று அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்,

பொதுவாக இயற்கை அனர்த்தம், போர் மற்றும் அசாதாரண நோய் சூழல் படைத்தரப்பை அனைத்திலும் முன் கொண்டுவந்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவக்கூடிய அசாதாரண நிலையை காரணம் காட்டி அரசு, படையினரை மேலும் ஆதரித்துவருகின்றது.

கோவிட் - 19 ஐ நோயாக பார்க்காமல் ஒரு கிளர்ச்சியாக கருதி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்று கூறியுள்ளார்.