அம்பாறை காஞ்சிரங்குடாவில் இராணுவ வீரர் திடீர் மரணம்

Report Print Dias Dias in இலங்கை

அம்பாறை, காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய 42 வயதுடைய ஜயவிக்கிரம எனும் இராணுவ சிப்பாய் திடீரென உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் நேற்றிரவு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

சுவாச பிரச்சினை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவரின் தொண்டையில் இருந்து பெறப்பட்ட மாதிரி, சந்தேகத்தின் அடிப்படையில் பிசிஆர் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.

இதன் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்பே உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

அதுவரை சடலம் பாதுகாப்பான முறையில் பிளாஸ்டிக் பையினுள் இட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளும் பரிசோதனைகளும் இடம்பெற்று வருகின்றன எனவும் கூறினார்.