இலங்கையில் கொரோனா தொற்று! இன்று பிற்பகல் வரையில் பதிவாகியுள்ள நிலை

Report Print Ajith Ajith in இலங்கை

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1085 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஏழு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் பத்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 1078ஆக அதிகரித்துள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் மேலும் 40 பேர் குணமான நிலையில் இன்று வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 660ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை இலங்கையில் மொத்தமாக 1068 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் (இன்று பிற்பகல் ஒரு மணிவரையில்) பதிவாகியுள்ளனர்.

அதில் 339 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

101 பேர் கொரோனா சந்தேக குணங்குறிகளுடன் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.