கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு கோட்டாபயவை பாராட்டிய மோடி

Report Print Dias Dias in இலங்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இலங்கை, கொரோனா தொற்றுநோயை திறம்பட எதிர்த்துப் போராடுகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார். இதன்போதே இந்தியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட முடக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தை கையாள்வதில் இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்று மோடி உறுதியளித்தார்.

இலங்கையில் இந்திய ஆதரவு அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாக தனது கீச்சகப் பதிவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.