சிறிலங்கா ஆட்சியாளர்களின் தமிழர்கள் மீது புதுவகையான காலனித்துவ அடக்குமுறை - கயானா நாட்டு முன்னாள் அதிபர்

Report Print Gokulan Gokulan in இலங்கை

இலங்கைதத்தீவில் காலனித்துவாதிகள் வழங்கிய சுதந்திரத்துக்கு பின்னராக, தமிழர்களுக்கு ஓர் விடுதலைவாழ்வு கிடைப்பதற்கு பதிலாக சிறிலங்காவின் ஆட்சியாளர்களின் புதுவகையான ஒர் காலனித்துவ அடக்குமுறையே தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது என மத்திய அமெரிக்காவின் கயானா நாட்டு முன்னாள் அதிபர் டொனால்ட் றமோதார் தெரிவித்துள்ளார்.

இணையவழியூடாக தொடங்கியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில், சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே இக்கருத்தினை தெரிவித்திருந்தார் அதிபர் டொனால்ட் றமோதார்.

தமிழர்களுக்கு எதிராக பல்வேறு ஒடுக்குமுறைச் சட்டங்களை கொண்டு வந்திருந்திருந்ததோடு, இதற்கு எதிரான தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தினை ஓர் சாக்காக வைத்து தமிழர்கள் மீது பாரிய படுகொலையினை மேற்கொண்டுள்ள நிலையிலேயே சிறிலங்காவின் சர்வாதிகாரிகளை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு கிடைக்கின்ற வெற்றி என்பது உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான வெற்றியாக நீதியாக அமையும், அந்த வெற்றியினை நோக்கி நீங்கள் பயணிக்க வேண்டும். உங்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் என்றும் உங்களோடு நாங்கள் (கயானா நாடு) இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.