இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பு

Report Print Ajith Ajith in இலங்கை

நாட்டில் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை இதுவரை 1148 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக கண்டறியப்பட்ட 7 தொற்றாளிகள் குவைத்தில் இருந்து வந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆகும்.

தொடர்ந்தும் 458 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நேற்றைய தினம் 52 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.