வெளிநாடுகளிலிருந்து வந்த 150 இலங்கையருக்கு கொரோனா தொற்று

Report Print Ajith Ajith in இலங்கை

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 150க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதில் குவைத் மற்றும் துபாயில் இருந்து வந்த 123 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை துபாயில் இருந்து கடைசியாக அழைத்துவரப்பட்ட 466 இலங்கையர்களில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்ட நிலையில், இன்று கட்டாரில் இருந்து 173 இலங்கையர்களுடன் வரவிருந்த ஸ்ரீலங்கன் எயார் விமானம் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.