43 பேருடன் வந்த விமானம் மத்தளவில் தரையிறக்கம்!

Report Print Rakesh in இலங்கை

பெல்ஜியம், பிரேஸிலிருந்து 43 பயணிகளுடன் வருகை தந்த போயிங் 737 விமானம், மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியுள்ளது.

காலித் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் கப்பலில் பணியாற்றவுள்ளவர்களே குறித்த விமானத்தில் வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தோர், விமான நிலையத்தில் வைத்து தொற்றுநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கப்பலில் பணியாற்றிய 35 பேர், பெல்ஜியம், பிரேஸிலிற்குபுறப்படுவதற்காக மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.