இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Report Print Ajith Ajith in இலங்கை

இலங்கையில் நேற்று இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 10 கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேரும், கடற்படையினர் 2 பேரும் உள்ளடங்குகின்றனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த இருவரும் இதற்குள் அடங்குகின்றனர்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1643 ஆக உயர்ந்துள்ளது

இது வரை 821 பேர் தொடர்ந்தும் கொரோனாவுக்காக சிகிச்சைப்பெற்று வருகின்றனர்;

811 பேர் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்துள்ளனர்.