மூன்று மாதங்களுக்காக வரவு, செலவு சுற்றறிக்கை

Report Print Steephen Steephen in இலங்கை

ஜூன் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையான மூன்று மாத காலத்திற்கு கூட்டு நிதியத்தில் இருந்து அரச செலவுகளை செய்ய வேண்டிய விதத்தை குறிப்பிட்டு வரவு, செலவு சுற்றறிக்கை ஒன்றை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சு இந்த சுற்றறிக்கையை அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணசபைகள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கைக்கு அமைய மூன்று மாதங்களுக்காக அரசின் மொத்த செலவு ஆயிரத்து 43 பில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 398.8 பில்லியன் ரூபாய் முதலீட்டு செலவுகள் மற்றும் கடனை செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சுக்காக 107.26 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார அமைச்சுக்கு 43.1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.