'75 கள்ள வாக்குகள் போட்டேன்' ஒப்புக்கொள்கிறார் சிறிதரன்!

Report Print Gokulan Gokulan in இலங்கை

“நான் கள்ள வாக்குப் போட்டேன்.. அதுவும் 75 கள்ளவாக்குகள் போட்டேன்…” என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்வேட்பாளர் சிறிதரன்.

செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

முதலில் சிறிதரன் கூறியதை கேட்டுவிட்டு வாருங்கள், மிகுதி விடயங்களை பேசுவோம்:

  • சிறிதரன் அவர்களே சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் 75 கள்ள வாக்குகளை அளித்தாகதெரிவித்திருந்தீர்களே- கள்ள வாக்குகளை நீங்களே அச்சிட்டு அவ்வாறு செய்தீர்களா அல்லது வேறுயாருடையதாவது வாக்குகளை நீங்கள் அளித்தீர்களா?
  • அச்சிட்டு கள்ள வாக்குகளை அளித்திருந்தால், அந்த வாக்குகளை எந்த அச்சகத்தில் அச்சிட்டீர்கள்? யார்யாரெல்லாம் உங்களுக்கு துணையாக இருந்தார்கள்? மொத்தம் எத்தனை வாக்குகளை அச்சிட்டிருந்தீர்கள்? வேறு யார் யாரெல்லாம் உங்களுடன் இணைந்து கள்ள வாக்களித்தார்கள்?
  • அப்படி அல்ல – வேறு யாருடையதாவது வாக்குகளைத்தான் அளித்திருந்தீர்கள் என்றால், யார் யாருடையவாக்குகளை அளித்தீர்கள்? அப்படி நீங்கள் செய்ததன் ஊடாக 75 தமிழர்களுடைய ஜனநாயக உரிமையை நீங்கள்தடுத்திருந்த குற்ற உணர்வு உங்களுக்கு இருக்கவில்லையா?
  • ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இவ்வாறு தேர்தல் விதிகளை மீறுவது ஒரு குற்றம் என்று உங்களுக்குத்தெரியாதா?
  • சிறிலங்கா தேர்தல் முறைகேடுகள் தொடர்பான Parliament Elections Act (No. 1 of 1981) - Sect 82 இன் படி 6 முதல் 12 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை உங்களுக்கு கிடைக்கச் சாத்தியம் இருக்கின்றதுஎன்பது உங்களுக்குத் தெரியுமா?
  • நீங்கள் தொலைக்காட்சிக்கு பகிரங்கமாக வழங்கிய செவ்வி, தேர்தல் சட்ட மீறலுக்கான உங்களது ஒப்புதல்வாக்குமூலமாக ஏற்றுக்கொள்ளலாமா?
  • இந்த 2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் நீங்கள் கள்ள வாக்குகள் போடுவதற்கு திட்டமிட்டுள்ளீர்களா?
  • எத்தனை கள்ள வாக்குகளைப் போடுவதற்கு தீர்மானித்துள்ளீர்கள்?
  • நீங்கள் உங்களுக்கு மாத்திரம்தான் அந்த கள்ள வாக்குகளை போட உள்ளீர்களா அல்லது வேறு யாராவது வேட்பாளருக்கும் கள்ள வாக்குகள் அளிக்க உள்ளீர்களா?