நானா துரோகி? விடுதலைப் புலிகளின் தலைவர் திட்டமிட்டார்! கருணா பகிரங்க குற்றச்சாட்டு - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

நான் துரோகியாக எப்போதும் இருந்தது இல்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என் மீதும் என்னுடன் இருந்த போராளிகள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டார். நான் அவர்களை பாதுகாத்து வீடுகளுக்கு அனுப்பியதைத் துரோகமாகக் கருதினால் என்ன செய்வது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

நான் யாரையும் காட்டிக் கொடுத்ததும் இல்லை. நான் தலைவருடன் எவ்விதத்திலும் முரண்பட்டவனும் அல்ல.

போராட்டத்தை எனக்கு தொடர்ந்து நடத்துவதற்கு முடியாது போனதால் நான் உள்ளிட்டவர்கள் அதிலிருந்து விலகினோம். நான் ஒதுங்கிக் கொண்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேர பிரதான செய்திகளின் தொகுப்பு,