வீசா பட்டியலுக்குள் உள்ளடக்கப்படாத இலங்கை! ஐரோப்பிய ஒன்றியம் விளக்கம்

Report Print Ajith Ajith in இலங்கை

விமான நிலையங்களை திறக்காத, அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து பயணிகளை ஏற்காத நாடுகளை தமது வீசா பட்டியலுக்குள் சேர்க்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

ஜூலை முதலாம் திகதியில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் தமது வெளிப்புற எல்லைகளை திறக்கின்ற நிலையில் அதற்காக 15 நாடுகளை பட்டியலிட்டுள்ளது.

அதில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை. எனினும் அந்த பட்டியலுக்குள் இடம்பெற இலங்கையின் பிரசல்ஸ் தூதரகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையிலேயே விமான நிலையங்களை திறக்காத ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஏற்றுக்கொள்ளாத நாடுகளை தமது பட்டியலில் இணைத்துக்கொள்வது தொடர்பில் இன்னும் கருத்திக்கொள்ளவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் அறிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடுகளின் கொரோனவின் கட்டுப்பாட்டு நிலை, ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தடைகளை குறித்த நாடுகள் தளர்த்தியுள்ளமை தொடர்பில் ஆராயப்பட்ட பின்னரே நாடுகளுக்கான பட்டியில் விரிவுப்படுத்தப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.