கடன் நிவாரணம் தொடர்பில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள இந்தியா

Report Print Ajith Ajith in இலங்கை

கடன் நிவாரணம் மற்றும் நாணய மாற்று தொடர்பில் இந்தியாவும், இலங்கையும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்திய உயர்ஸ்தானிகர தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னதாக கடன் செலுத்துகையை காலந்தாழ்த்துமாறு விடுத்த கோரிக்கைக்கு இந்தியா இன்னும் பதில் வழங்கவில்லை என்று இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்த நிலையிலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த இரண்டு விடயங்கள் தொடர்பில் இந்திய - இலங்கை தலைவர்கள் மட்ட சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே அதிகாரிகள் மட்ட பேச்சுக்கள் தற்போது நடத்தப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரக தரப்புக்கள் தெரிவித்துள்ளன.