இலங்கை கடற்படைத்தளபதியுடன் சந்திப்பு நடத்திய அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி

Report Print Ajith Ajith in இலங்கை

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் பிரையன் எஸ் பேஜ் இலங்கையின் கடற்படை தலைமையகத்துக்கு சென்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுடன் அவர் இருதரப்பு உறவுநிலைக்குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இரண்டு நாடுகளும் கடல் பாதுகாப்பு விடயத்தில் இதுவரை காட்டிவரும் ஒத்துழைப்புகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக இலங்கையின் கடற்படையினர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.