இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகிறதா? அரசாங்கத்தின் அறிவிப்பு

Report Print Sujitha Sri in இலங்கை

இலங்கையில் திடீரென கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்துள்ள போதும் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மாத்திரமே பலப்படுத்தப்படும் என்பதனால் பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் மூலம் சமூகத் தொற்று பரவ வாய்ப்பில்லை.

தேர்தலை இலக்காகக் கொண்டு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைளை அரசாங்கம் தளர்த்தவில்லை.

கடந்த மூன்று மாத காலமாக நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும், சுகாதர அறிவுறுத்தல்கள் முறையாக பின்பற்றப்பட்டன.

தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது. அதற்கான தேவை தற்போது இல்லை.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினை எதிர்கொள்ள சுகாதார தரப்பினரும், பாதுகாப்பு தரப்பினரும் தயாராகவே உள்ளார்கள்.

அரசாங்கம் முறையாக தொற்றை கட்டுப்படுத்தும் என்பதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.


you may like this video