சுதந்திரக் கட்சியின் தலைவராகிறாரா பிரதமர் மஹிந்த

Report Print Gokulan Gokulan in இலங்கை

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்வார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பில் நேற்றைய தினம் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மறுக்கமுடியாத மற்றும் மிகவும் பொருத்தமான அரசியல்வாதியாக இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியை வலுவான அரசியல் கட்சியாக புத்துயிர் பெறச்செய்ய தலைமையை ஏற்கவேண்டும்.

1952 இல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து அவரைப் போன்ற வலுவான தலைவர்களால் கட்சி வழிநடத்தப்படுகிறது. எனவே மீண்டும் ஒரு முறை சுதந்திரக் கட்சியின் தலைவராவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் அவருக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.