மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் மின்சார கட்டணங்கள்! வெளியிடப்பட்டுள்ள மகிழ்ச்சிகரமான அறிவிப்பு

Report Print Sujitha Sri in இலங்கை

இலங்கையில் மின் பாவனையாளர்களிடம் பெப்ரவரி மாத மின் பட்டியலில் வந்துள்ள கட்டணத்தையே கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் மின்சார கட்டணங்களாகவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை குறித்த மூன்று மாதங்களுக்குமான மின் கட்டணங்களை செலுத்த மேலதிகமாக இரு மாதங்கள் சலுகை காலமும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதலாவது இலங்கையர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் மாத நடுப்பகுதி முதல் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டிருந்தன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகளவில் வந்துள்ளதாக மின் பாவனையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டதுடன், அந்த குழுவின் பரிந்துரை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே மின் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this video