பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை

Report Print Dias Dias in இலங்கை

இரத்தினபுரி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கஹவத்தை பகுதியில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார பேரணி இடம்பெற்ற போது, ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்சன சில்வா மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயக்கொடி ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.