இலங்கை கடற்படை தளபதியை சந்தித்த இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர்

Report Print Ajith Ajith in இலங்கை

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி இன்று இலங்கையின் கடற்படை தளபதியை சந்தித்துள்ளார்.

இலங்கையின் கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகத்தேன்ன பதவியேற்ற பின்னர் உத்தியோகபூர்வ சந்திப்பாக இது அமைந்திருந்தது.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது.

அத்துடன் தொடர்ந்தும் இரண்டு நாடுகளும் தமக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தி கொள்வதற்கும் இரண்டு தரப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய கடற்படை தளபதியின் வாழ்த்துச் செய்தியை இதன்போது அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இலங்கையின் கடற்படை தளபதியிடம் கையளித்துள்ளார்.