கொழும்பு துறைமுகப்பணியாளர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பு வெற்றியுடன் முடிவடைந்துள்ளதாக துறைமுகப் பணியாளர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் தமது பணிப்புறக்கணிப்பு குறித்து இன்று முடிவெடுக்கவுள்ளதாக அந்த தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவுடன் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு தளத்தை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று கோரி துறைமுக பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஒரு கட்டமாக நேற்று அவர்கள் கொழும்பு புளுமெண்டால் துறைமுக வழியை மறித்து ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொண்டனர்.