உறவினர்களாக மாறிய முக்கிய அரசியல்வாதிகள்

Report Print Steephen Steephen in இலங்கை

பொதுத் தேர்தலுக்கு முன்னர் அமைச்சர்கள் பந்துல குணவர்தனவும், சுசில் பிரேம ஜெயந்தவும் உறவு முறை சகோதரர்களாக மாறியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன்னர் பந்துல குணவர்தனவின் புதல்வர் திருமணம் செய்து கொண்டார்.

சுசில் பிரேமஜயந்தவின் சகோதரியின் புதல்வியை பந்துலவின் புதல்வர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பந்துல குணவர்தன மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.