இலங்கைக்கு பயணிக்கும் அமெரிக்க பிரைஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Report Print Ajith Ajith in இலங்கை

இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா, தமது நாட்டு மக்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.

உலகளாவிய கொரோனாவைரஸ் தொற்று தொடர்பான பயண அறிவுறுத்தலில் அமெரிக்க தொற்று நோய் தடுப்புப்பிரிவு இந்த ஆலோசனையை விடுத்துள்ளது.

கொரோனா தொற்று தொடர்பாக அமரிக்க தொற்றுநோய் பிரிவு 4 கட்டங்களை தரமிட்டுள்ளது அதில் இலங்கை 3ஆம் தரத்தில் பதிவாகியுள்ளது.

சில நாடுகளில் கொரோனா ரைவஸ் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் மேம்படுவதுடன் ஏனையவற்றில் மோசமடையக்கூடும்.

இதன் அடிப்படையில் அமெரிக்க தொற்றுநோய் தடுப்பு பிரிவு பயண ஆலோசனைகளை மாற்றியமைத்து வருகிறது.

இதேவேளை இலங்கை வீடுகளில் முடக்கநிலை நீக்கப்பட்டுள்ளதாகவும் சில போக்குவரத்து மற்றும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் அமெரிக்க ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.