மாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

Report Print Banu in இலங்கை

கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக மாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு திரும்பி வந்துள்ளனர்.

குறித்த குழுவினர் இன்று ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானத்தில் மத்தல விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

நாட்டிற்கு வந்த பின்னர் அவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கையில் இன்றைய தினம் 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2867 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.