இன்றும் இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Steephen Steephen in இலங்கை

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து வந்த நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களுடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 875 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 29 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இவர்களுடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 622 என அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 242 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.