அரச உயர் விருது பெற்ற மரிய சேவியர் அடிகளார்

Report Print Dias Dias in இலங்கை
177Shares

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கைக் கலைக்கழகம், அரச நாடக ஆலோசனைக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 11.09.2020 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு, தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற அரச நாடாக விழாவில் அரச உயர் விருதுகளில் ஒன்றான 'நாடகக் கீர்த்தி' விருது திருமறைக் கலாமன்ற இயக்குநர் அருட்கலாநிதி மரிய சேவியர் அடிகளாருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்ட து.

திருமறைக் கலாமன்றம் என்ற கலை நிறுவனத்தை நிறுவி,கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக இடையறாத கலைப்பயணத்தில் பல்வேறுபட்ட சாதனைகளைப் படைத்து இன்றைய நாட்களில் உடல் தளர்வுற்று, ஓய்வு நிலையில் இருக்கின்ற அருட்கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளாருக்கு 'நாடகக் கீர்த்தி' என்னும் முதுகலைஞர் அரச உயர்விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை சிறப்பான விடயமாகும்.

இந்த விருதினை மரிய சேவியர் அடிகளார் நேரில் சென்று பெற முடியாத நிலையில் திருமறைக் கலாமன்றத்தின் உதவி நிர்வாக இயக்குநர் அருள்பணி.அ.அன்ரன் ஸ்ரிபன் அடிகளார் பெற்றுக்கொண்டார்.