மத்திய கிழக்கில் சிக்கியிருந்த 400இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Report Print Banu in இலங்கை
63Shares

கொவிட் -19 தொற்றால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களில் மேலும் பலர் நாட்டுக்கு திருப்பியனுப்பபட்டுள்ளனர்.

துபாய் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து 405 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, துபாயிலிருந்து 341 பேரும், கட்டாரிlஇருந்து 64 பேரும் இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

குறித்த நபர்கள் அனைவரும் விமான நிலையத்திற்கு வந்ததும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைபப்டுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.