இலங்கையின் கிழக்கு சங்கமன்கண்டிக்கு அப்பால் கடலில் தீப்பற்றிக் கொண்ட நியூ டயமண்ட் கப்பலின் தலைவரிடம் இலங்கை பொலிஸார் வாக்குமூலத்தை பதிவுசெய்துள்ளனர்.
பொலிஸின் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
காலியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த வாக்குமூலம் குற்றப்புலனாய்வுத்துறையினரால் கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கப்பலின் தலைவரிடமும், கப்பலின் பணியாளர்கள் 23 பேரிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.