இலங்கையின் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 12 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மாவட்ட நீதிபதிகளாக கடமையாற்றிய டபிள்யூ.ஏ.பெரேரா, சீ.மீகொட, ஏ.ஐ.கே.ரணவீர, டபிள்யூ.எம்.எம்.தல்கொடபிட்டிய, சீ.பீ.குமாரி தேல, எச்.எஸ்.பொன்னம்பெரும ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அத்துடன் பிரதான நீதவானாக கமையாற்றிய கே.எஸ்.எல் ஜயரத்னவும், நீதவான்களாக சேவையாற்றிய ஆர்.எஸ்.திஸாநாயக்கவும், டீ.ஏ.ஆர் பத்திரனவும் மேலதிக மாவட்ட நீதிபதியாக செயற்பட்ட எஸ்.ஐ.காலிங்கவன்சவும் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக குறிப்பிடப்படுகிறது.
இதுதவிர அரச சிரேஷ்ட சட்டவாதிகளான என்.டி.விக்ரமசேகர, என்.கே.சேனவிரத்னவும் ஜனாதிபதி முன்னிலையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.