தமிழரசு கட்சியின் பொதுக்குழுவை கூட்டும் தினம் தொடர்பில் ஆலோசனை

Report Print Dias Dias in இலங்கை
59Shares

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழுவை கூட்டும் தினம் தொடர்பில் ஆலோசித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுக்குழுவை கூட்டும் தினம் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக துரைராசசிங்கம் கடந்த 11 ஆம் திகதி கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

எனினும் குறித்த கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.