கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

Report Print Dias Dias in இலங்கை

தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் யாழ் நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டு உள்ளார்.

இந்திய - இலங்கை அரசுகளிடம் நீதிகோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது நினைவு தினம் நேற்று பல தடைகளையும் தாண்டி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் நினைவுகூரப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவுதினத்தில் நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவுகள் போலீசார் நீதிமன்றத்தின் ஊடாக எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அனுஸ்டித்தார்.