லண்டனில் குட்டிமணியின் மனைவி இராஜரூபராணியின் இறுதி நிகழ்வுகள்

Report Print Dias Dias in இலங்கை

குட்டிமணி அவர்களின் துணைவியார் இராஜரூபராணி அவர்களின் இறுதி நிகழ்வுகள். பிரித்தானியாவில் அவர்களது குடும்பந்தவர்களினதும் ரெலோ பிரித்தானிய கிளையினரினதும் ஒழுங்கமைப்பிலும் உணர்வு பூர்வமாக நேற்றைய தினம் லண்டனில் அனுஸ்டிக்கப்பட்டது.

நேற்றுக் காலை 9.45 - 10.30 மணிவரை அவர் வசித்துவந்த இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் போன்றவர்களால் அஞ்சலி செய்யப்பட்டது.

உடலுக்கு ரெலோ கட்சியின் சார்பில் ரெலோ கட்சியின் கொடி பிரித்தானியா கிளையின் செயலாளரும் மத்தியகுழு உறுப்பினருமான க. திரு மற்றும் மூத்த உறுப்பினரும் பொதுக்குழு உறுப்பினருமான பு. மனேச்சர் அவர்களாலும் போர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

அன்னாரின் உடல் சமய சடங்குகளை ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் காலை 10.30 இருந்து நண்பகல் 1.00 மணிவரை குடும்பத்தவர்களால் முறைப்படி அனுஸ்டிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ரெலோ பிரித்தானியா கிளையினராலும் குடும்ப உறுப்பினர்களாலும் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டு அஞ்சலிப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி

குட்டிமணியின் மனைவி லண்டனில் காலமானார்