சர்ச்சைக்குரிய விக்னேஸ்வரன் - டெனிஸ்வரன் வழக்கு முடிவிற்கு வந்தது!

Report Print Dias Dias in இலங்கை

சட்டத்தரணி டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 அன்று வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை முன்னாள்முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்தார்.

பிரதான வழக்கில் சட்டத்தரணி டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 அன்று தீர்ப்பளித்தது.

இந்தச் சூழலில் க.வி.விக்னேஸ்வரனிற்கு எதிராக தொடரப்பட்ட இரு நாட்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

எந்தவித நிபந்தனையுமின்றி வழக்கை முடித்துக் கொள்வதாக பா.டெனிஸ்வரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கு சுமுகமாக முடிவுக்கு வந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, டெனிஸ்வரன் தரப்பில் வழக்கை மீளப் பெறுவதாக அறிவித்தது.

இந்த கருத்தை நீதிமன்றம் அனுமதித்து, வழக்கு சுமுகமாக முடித்து வந்தது.