புதிய கூட்டணியை விரிவுபடுத்துவதில் விக்னேஸ்வரன் தீவிரம்

Report Print Dias Dias in இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் கூட்டணியை பரந்துபட்ட கூட்டணியாக விரிவுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து இதற்காக ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளுடனும், அமைப்புக்களுடனும் பேச்சுவார்தைகள் இடம்பெற்று வருகின்றன.

தற்பொழுது தமிழ் தேசிய மக்கள் கூட்டணியில் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி அனந்த சசிதரன் தலைமையிலான தமிழர் சுயாட்சி கழகம், சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியன அங்கம் வகிக்கின்றன.

தேர்தலுக்கு முன்னர் வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி பேச்சுவார்தை நடத்தியிருந்தது, எனினும், இந்த கட்சிகள் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் இணையவில்லை.

இவ்வாறான சூழலில் தேர்தலுக்கு பின்னர் வடக்கு - கிழக்கு மக்களுடைய சிந்தனை மாற்றத்தை அடிப்படையாககொண்டு கூட்டணியை மேலும் விஸ்தரிப்பதுடன் தமிழ் தேசிய கொள்கை பரப்பில் செயற்படுகின்ற சகலஅமைப்புக்களுடனும் பேச்சுவார்தை நடத்த சீ.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது.